fbpx

”அந்த ரகசியங்களை அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார்”..!! எச்சரிக்கும் ஓபிஎஸ்..!!

நான் சில விஷயங்களை சொன்னால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்றுவிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமியின் அதிகாரபோதையால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தோற்றது. அதிமுக தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

உண்மையான அதிமுகவை மீட்டெடுப்பதற்காக மட்டுமே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். அதிகார போதை, பணத் திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர் அதிக இடர்பாடுகளை கொடுத்தனர்.

ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன். எடப்பாடி கேட்காததால் ஆட்சி போனது, அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோல்வி. 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை மோடி தந்துள்ளார். அவர் மீண்டும் பிரதமரானால் இந்தியா சுபிட்சமாக, நன்றாக இருக்கும்” என்றார்.

Chella

Next Post

”உறுதியாக சொல்கிறேன்”..!! ”பாஜகவுடன் கூட்டணி இல்லை”..!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

Tue Dec 26 , 2023
சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த பிறகு நடைபெற்ற கூட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இன்றைய தினம் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். தொண்டர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை. கூட்டத்தில் […]

You May Like