பொதுவாக ஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தக்கூடிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. தூய்மையான மனதோடு பிடித்தமான கடவுளை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நல்ல பலன் எப்போதும் கிடைக்கும் என்றுதான் அனைத்து விதமான மதங்களும் கூறி வருகின்றன.
வாழ்க்கையில் தற்போது பணம் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. வீட்டில் பணம் செழிக்க வேண்டும் என்றால் லட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்பதே இந்து மத நம்பிக்கையாக கருதப்படுகிறது. அப்படி உங்கள் வீட்டில் லட்சுமி இல்லை என்று நினைத்தால், இது போன்று வீட்டிலேயே செய்து தீர்வை காணலாம்.
கடவுள் மற்றும் கிரகங்களுடன் நேரடி தொடர்புடையதாக மஞ்சள் கருதப்பட்டு வருகிறது. மேலும் மங்களகரமான பொருள் என்றாலே முதன்மையாக மஞ்சள் இருந்து வருகிறது. வீட்டின் நிலப்படி வாசற்கதவில் தினமும் இருபுறமும் மஞ்சள் தூள் தூவ வேண்டும். காலை குளித்த பிறகு தினசரி என மொத்தம் 21 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் வீட்டில் லட்சுமி வருகையும் இருக்கும். நிதி நிலையும் உயரும் என்பது ஐதீகம்.
இந்த பரிகாரம் செய்யும் போது மஞ்சள் பொடியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் மனதில் லட்சுமியை நினைத்து கொள்ள வேண்டும். வீட்டு வாசலில் மஞ்சள் பொடி அதிகமாக கிடக்கிறது என்ன செய்ய வேண்டுமென்று கேட்டால், அதை எடுத்து ஒரு செடியில் போட வேண்டுமே தவிர குப்பையில் கொட்டக்கூடாது.
வாஸ்து தோஷம் : வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து வந்தால் வீட்டின் ஏற்பட்டுள்ள வாஸ்து மற்றும் கிரகங்களில் தோஷங்கள் நீங்கும். நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கும். ராகுவுடன் தொடர்புடைய மஞ்சளை வீட்டு வாசலில் தெளித்து வந்தால் வீட்டில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் வாசலில் ஸ்வஸ்திக் சின்னத்தில் கோலமிட்டு மஞ்சளை தெளித்து குங்குமம் பொட்டிட்டு வந்தால் வீட்டில் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணி வாசம் செய்வார்கள் என்று நம்பப்பட்டு வருகிறது.
மேலும் வீட்டு வாசலில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று மஞ்சள் தெளித்து கோலமிட்டு மாட்டு சாணத்தை பிடித்து கோலத்தின் நடுவில் வைத்து செம்பருத்தி பூ அல்லது ஏதாவது ஒரு வகையான பூவை சாணத்தின் நடுவே வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள். இதனால் நேர்மறையான ஆற்றல் பெருகி அனைத்து விதமான செல்வங்களும் அதிகரிக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.
Read more ; பொதுமக்களின் குறை தீர்ப்புக்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 13 நாட்களாக குறைப்பு…!