வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் திருவிழா நடத்தப்படுவது குறித்து உங்களுக்கு தெரியுமா..? அதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
உலகளவில் இன்றைய கால நிலை மாற்றத்தால் பல நோய்கள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா, உகாண்டா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வைரஸ் தொற்று வேகமாகப் பரவி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. ஆனால், வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் இந்தியாவில் வைரஸ் தொற்று என்பது மிகவும் குறைவுதான்.
இருப்பினும், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் பல லட்ச உயிர்களை கொன்றது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு, தடுப்பூசி போடப்பட்ட பிறகு தான் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது.
இதற்கிடையே, வைரஸ் தொற்றுகள் பரவாமல் இருக்க உலக சுகாதார அமைப்பு முதல் உள்ளூர் மருத்துவம் வரை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க வினோத திருவிழா நடத்தப்படுவது உங்களுக்கு தெரியுமா..? ஆம், நெல்லை மாவட்டத்தில் தான் இந்த திருவிழா நடைபெறுகிறது.
பாளையங்கோட்டையில் தெற்கு பஜாரில் தங்கம்மன் கோவிலில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின் போது பக்தர்களுக்குப் பிரசாதமாக கூல் வழங்கப்படுகிறது. இந்த கூழில் சீரகம், வெங்காயம் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பானக்கரயத்தில் ஏலக்காய், சுக்கு, மிளகு உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் வலுப்பெற்று வைரஸ் பரவுதலில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் என்று கூறுகின்றனர். முன்னதாக காலரா, டைபாய்டு போன்ற வைரஸ் தொற்று பரவி வந்தபோது, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற திருவிழாக்களை முன்னோர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.