fbpx

‘பெண்களை பலாத்காரம் செய்தால் வீடு இடிக்கப்படும்’.. ’தூக்கு தண்டனை விதிக்கப்படும்’..!! முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவார்கள் என்றும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில், மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

மேலும் காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. அண்மையில் மத்தியப்பிரதேசத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Chella

Next Post

யார் அந்த அழகப்பன்..? உதவாத கட்சி..!! பாஜகவில் இருந்து விலகிய கௌதமி..!! காரணமே வேறயாம்..!!

Mon Oct 23 , 2023
பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நடிகை கௌதமி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் நான் பாஜகவின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எனது முயற்சிகளுக்கு பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் […]

You May Like