fbpx

”இப்படி பண்ணிட்டாலே”..!! ”மகாலட்சுமியை திட்டித் தீர்க்கும் ரவீந்தர் குடும்பம்”..!! பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும், பலர் எதிர்மறை விமர்சனங்களையே முன்வைத்தார்கள். ஆனாலும், இத்தம்பதி அவ்வாறான விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், தங்களது வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மோசடி வழக்கு ஒன்றில், ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி ரூ.16 கோடி அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில், பயில்வான் ரங்கநாதன் பரபரப்புக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ரவீந்தர் வீட்டில் “வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா” என்று மகாலட்சுமியைக் குத்திக் காட்டிப் பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’இது நிஃபா வைரஸ் இல்லையா’..? அதிக உயிரை காவு வாங்கும் ’பங்களாதேஷ் வேரியண்ட்’..!! இதற்கு மருந்தே கிடையாதாம்..!!

Wed Sep 13 , 2023
கேரளாவில் பரவி வரும் நிஃபா வைரஸ் ‘பங்களாதேஷ் வேரியன்ட்’ (Bangladesh Variant) எனப்படும் மிக அபாயகரமான தொற்று எனக் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நிஃபா வைரஸ் பரவி, பலரின் உயிரை காவு வாங்கியது. இதையடுத்து, தற்போது மீண்டும் நிஃபா வைரஸ் பரவ தொடங்கி இருக்கிறது. இந்த வைரஸால், 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது புதிதாக 4 பேர் நிஃபா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் ஒருவரின் […]

You May Like