fbpx

மக்களே..! 6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் பெயர் நீக்கம்…! அரசு அதிரடி முடிவு…!

தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத நுகர்வோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் சுமார் 99.8% குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைகள் திட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்பட்ட வருகிறது. இவர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, சர்க்கரை 1 கிலோ, கோதுமை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ரேஷன் அட்டை குறித்து தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் மாதம் மாதம், அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத நுகர்வோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் நுகர்வோர் ரேஷன் கடைக்கு வரவில்லை என்றால், அவர்களது பெயர் நீக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமன்றி தகுதியான மற்றொருவரின் பெயரைச் சேர்த்து காலி இடம் நிரப்பப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் நுகர்வோரின் பெயர்கள் கடைக்கு வெளியே உள்ள பலகையில் தொங்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல் அறிந்து நுகர்வோர் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது.

English Summary

If you do not buy ration items for 6 months, your name will be deleted

Vignesh

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு...! போதை தடுப்பு... 1933 என்ற உதவி எண் மத்திய அரசு அறிமுகம்...!

Mon Jul 29 , 2024
Prevention of Narcotics... Help No. 1933 Introduction by the Central Government

You May Like