fbpx

பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…! இனி இதை செய்தால் ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யப்படும்…!

பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வணிகம் செய்பவர்கள் தாங்கள் வாங்கக்கூடிய பொருட்களுக்கு மாநில அரசுக்கு வரி என்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டும் ஆனால் வணிகம் நிறுவனங்கள் அந்த தொகையைச் செலுத்துவதில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் தயாரித்து அதன் மூலமாக வணிகம் செய்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தற்போது வணிகத்துறை அமைச்சர் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் மூர்த்தி. இதனால் வரும் காலங்களில் போலியாக பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

நாடு முழுவதும் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.10,218 ஆக உயர்வு...! முழு விவரம் இதோ...

Sat Feb 10 , 2024
விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 2012-13-ம் ஆண்டில் ரூ.6426 லிருந்து 2018-19 ஆம் ஆண்டில் ரூ.10218 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் கூறியதாவது; 2013-14-ம் ஆண்டில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்தது ரூ.27,662.67 கோடி. இது 2023-24 பட்ஜெட்டில் 5 மடங்கு அதிகரித்து ரூ.1,25,035.79 கோடியாக உள்ளது. இதன் விளைவாக, வேளாண்மை மற்றும் […]

You May Like