fbpx

’இதை செய்தால் உடனே லோன் அப்ரூப், குறைந்த வட்டி’..!! கிரெடிட் கார்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கா..?

ஒரு தனி நபருக்கு லோன் வழங்கலாமா? வேண்டாமா? என்ற முடிவுகளை எடுப்பதற்கு நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட அந்த நபரின் கிரெடிட் ஸ்கோரை முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கின்றனர். எனவே, ஒவ்வொரு நபரும் CIBIL ஸ்கோர் என்றால் என்ன?, அதனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

CIBIL ஸ்கோர் என்பது என்ன?

CIBIL ஸ்கோர் என்பது ஒரு நபரின் கிரெடிட் வரலாறுக்கான சுருக்கத்தை எண் வாயிலாக வெளிப்படுத்தும் ஒரு மதிப்பீடு. 0 முதல் 900 வரையிலான 3 இலக்க எண் தான் CIBIL ஸ்கோர். ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் அதிகரித்தால் அந்த நபரின் கிரெடிட் வரலாறும் மேம்படும். CIBIL ஸ்கோரை பாதிக்கக்கூடிய கூறுகள் என்ன என்பதை புரிந்து கொண்டு, அதனை சரி செய்வது ஸ்கோரை மேம்படுத்துவதற்கு உதவும்.

நீங்கள் சரியான முறையில் இ.எம்.ஐ. அல்லது கடன்களை திருப்பி செலுத்தி வந்தாலும், வங்கிகள் அதனை பதிவு செய்ய தவறிவிட்டதால், உங்களது CIBIL ஸ்கோரில் பிரச்சனை எழும்பொழுது நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.

* முதலில் நீங்கள் டிஸ்ப்யூட் ஃபார் ஒன்றை நிரப்ப வேண்டும். இதனை https://www.cibil.com/ என்ற தளத்தில் செய்யலாம். தேவையான தகவல்கள் அனைத்தையும் வழங்குவதன் மூலமாக இந்த படிவத்தை நிரப்ப முடியும்.

* தேவைப்பட்டால் ஒரு சில டாகுமெண்ட்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். எதிர்கால தேவைகளுக்காக நீங்கள் பதிவு செய்த இந்த டிஸ்ப்யூட் ஃபார்மின் ஒரு நகலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* டிஸ்ப்யூட் ஃபார்மை ஃபைல் செய்த பிறகு குறிப்பிட்ட கடன் வழங்குநருடன் உங்களது நிலைமையை உறுதிப்படுத்த CIBIL விசாரணை நடத்தும். நீங்கள் விட்ட இந்த சவாலுக்கு பதில் அளிப்பதற்கு கடன் வழங்குநருக்கு 30 நாட்கள் வழங்கப்படும். பிழை நடந்திருப்பதாக வங்கி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், CIBIL அதன் ரெகார்டில் தேவையான மாற்றங்களை செய்யும்.

* நீங்கள் எழுப்பிய டிஸ்ப்யூட் உங்களுக்கு சாதகமாக முடிவடைந்தால், கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் CIBIL ஸ்கோரில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, உங்களிடம் ரிவைஸ்டு கிரெடிட் ரிப்போர்ட் வழங்கப்படும்.

* உங்களது சவாலை கடன் வழங்குனர் நிராகரித்து விட்டால், உங்களது கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோரில் உள்ள தகவல்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாது. இந்த சூழலில், நீங்கள் உங்கள் வங்கி அல்லது கடன் வழங்குநரை அணுகி சரியான நேரத்திற்கு நீங்கள் லோனை திருப்பி செலுத்தி விட்டீர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையக்கூடிய டாக்குமெண்ட்களை சமர்ப்பிக்க வேண்டும்.

* உங்களுக்கு வழங்கப்பட்ட தீர்வில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலோ அல்லது 30 நாட்களுக்கு உள்ளாக உங்களுக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்றாலோ பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் மீண்டும் CIBIL-ஐ அணுகலாம்.

* எனினும், ஒரே இரவில் உங்களது கிரெடிட் ஸ்கோர் அதிகரித்து விடும் என்ற எண்ணம் வைத்திருக்க வேண்டாம். இதற்கு கால அவகாசம் எடுக்கும்.

* குறைவான கிரெடிட் ஸ்கோர் இருப்பது லோன் பெறுவதற்கான சாத்தியங்களை குறைக்கிறது. அதுவே நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது லோன் அப்ரூவ் ஆவதை விரைவுப்படுத்துவது மற்றும் குறைந்த வட்டியில் லோன் பெறுவது போன்ற பலன்களை தரும்.

Chella

Next Post

பிரியாணி சாப்பிட வந்தது ஒரு குத்தமா..? ஓட்டல் ஷட்டரை மூடி வாலிபரை அடித்தே கொன்ற ஊழியர்கள்..!! நடந்தது என்ன..?

Mon Sep 11 , 2023
பிரியாணி சாப்பிடச் சென்ற வாலிபரை ஓட்டல் ஊழியர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்திரயான் குட்டாவைச் சேர்ந்தவர் லியாகத் (30). இவர், நேற்று நள்ளிரவில் பஞ்சாகுட்டாவில் உள்ள ஓட்டலுக்கு நண்பருடன் சென்று பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பிரியாணி வந்தவுடன் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவருக்கும், ஓட்டல் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மற்ற ஊழியர்களும் தகராறில் ஈடுபட்டதால் வாக்குவாதம் முற்றி […]

You May Like