fbpx

சரியாக பல் தேய்க்கவில்லை என்றால் இவ்வளவு பாதிப்பு இருக்கா..? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

பற்கள் தான் நம்முடைய முகத்திற்கு அழகு சேர்க்கிறது. எனவே, பற்களை வெள்ளையாக மட்டும் வைத்துக்கொள்வதோடு பல் ஆரோக்கியம் மற்றம் வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவை உடலில் பாக்டீரியாவைக் கட்டுக்குள் வைத்திருக்க அனுமதிக்கிறது. எனவே, சரியான பல் சுகாதாரம் இல்லாமல் இருப்பது, பாக்டீரியாக்கள் பல் சொத்தை மற்றும் ஈறு நோய் போன்ற வாய்வழி தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

மோசமான பல் சுகாதாரம் நிமோனியாவுக்கு எவ்வாறு வழிவகுக்கிறது…?

பொதுவாகவே வாயில் கிருமிகள் நிரம்பியிருக்கும் போது, உங்களது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வளரச் செய்கிறது. இதனால் பல் பிரச்சனைகள் ஏற்படுவதோடு, சில பாக்டீரியாக்கள் சுவாச மண்டலத்தில் நுழைகின்றன. இவை நுரையீரலுக்குள் நுழைந்து நிமோனியாவை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை உருவாக்குகின்றன. இதோடு நம்முடைய வாய் மற்றும் பல சுகாதாரமற்று இருக்கும் போது, கிருமிகள் உடலில் நுழைவதற்கான வாய்ப்பாக அமைகிறது.

வாய்வழியாக நுழையும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், நுரையீரல் செல்களின் சென்சார்களை அதிகரிப்பதோடு, நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. பாக்டீரியா மற்றும் அதன் சேர்மங்களால் சளியின் அதிகப்படியான உற்பத்தி காரணமாக அறிகுறிகள் மோசமடைகின்றன.

வாய்வழி சுகாதாரத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகள்:

  • ஃப்ளூரைடு பற்பசை மற்றும் 2 நிமிடங்களுக்கு மென்மையான முட்கள் கொண்ட ப்ரஸ்கள் மூலம் தினமும் இரண்டு முறையாவது நீங்கள் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். உங்களது ப்ரஸ்கள் சேதமடையும் பட்சத்தில் உடனடியாக வேறு ப்ரஸ் மாற்றிவிட வேண்டும்.
  • பற்களுக்கு இடையில் இருக்கும் உணவுத் துகள்களை அகற்ற எப்போதும் ஃப்ளோஸ் செய்ய வேண்டும்.
  • 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.
  • சர்க்கரை நிறைந்த உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.
  • புகைபிடித்தல் மற்றும் புகையிலை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வாயைப் பாதுகாக்கும் வழக்கமான பல் பரிசோதனைகள் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிளேக்கின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும். எனவே, இதுப்போன்ற நடவடிக்கைகளை நீங்கள் முறையாக கடைப்பிடித்தாலே எவ்வித உடல் பாதிப்பும் உங்களுக்கு ஏற்படாது.

Chella

Next Post

ரேஷன் கார்டை தொலைத்து விட்டீர்களா….? இனி கவலைப்பட தேவையில்லை…..! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!

Sat May 6 , 2023
தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரம் பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்சமயம் இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் OR கோடு வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். இணையதளம் மூலமாக குடும்ப அட்டை நகர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் […]

You May Like