fbpx

UTS செயலியில் வந்தது அதிரடி மாற்றம்.. இத செய்யலன்னா உங்க டிக்கெட் கேன்சல்!!

யுடிஎஸ் செயலி மூலம் ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கும் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் வீடு உள்பட எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து கொள்ள முடியும்.

பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்ல நடைமேடை டிக்கெட் என தொடங்கி  மெட்ரோ மற்றும் சீசன் டிக்கெட் போன்றவற்றை புக் செய்ய யூடிஎஸ் செயலியை பயன்படுத்தி வந்தனர். இதனை உபயோகிக்கும் பலரும் இதில் உள்ள ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடு மக்கள் உபயோகிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று புகார் அளித்தும் அத்தனை நீக்கும் படியும் வலியுறுத்தி வந்தனர்.

இதன் மீது கவனம் கொண்ட ரயில்வே நிர்வாகம், தற்பொழுது இந்த ஆப்ஷனை நீக்கி உள்ளது. முன்பு இந்த ஜியோ பென்சிங் இருந்ததால் குறுகிய எல்லைக்குள் இருக்கும் பொழுது மட்டும்தான் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். ஆனால் தற்பொழுது இந்த ஆப்ஷனை எடுத்து விட்டதால் பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட் உள்ளிட்டவற்றை புக் செய்து கொள்ளலாம்.

அதாவது குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து தான் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட ஒருவர் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் ரயில் நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Post

"தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே கிடையாது" - வைரலாகும் தங்கர் பச்சான் வீடியோ!

Tue Apr 30 , 2024
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே கிடையாது என்றும் ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது எனவும் இயக்குநர் தங்கர் பச்சான் கூறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கடலூர் தொகுதியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதால் ஆளும் கட்சியினர் பல வழிகளில் இவரை முடுக்க நினைத்தனர். இந்நிலையில், தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் […]

You May Like