fbpx

காசு தரலைன்னா போக்சோ வழக்கு..! பள்ளி நிர்வாகியை மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர்!!!

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தொடர்பில்லாத பள்ளி நிர்வாகியின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை நகரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த சேந்தங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் (34) என்ற ஆசிரியர் மாணவர்களுக்கான விடுதியில் வார்டனாகவும் பணியாற்றி வந்தார். ஆசிரியர் சீனிவாசன் பள்ளி விடுதியில் தங்கி, படித்துவரும் மாணவர்களுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் மாணவன் ஒருவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்ட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சீனிவாசன் போக்சோ சட்டத்தில் டிசம்பர் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் சீனிவாசனை பள்ளி நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியது. அதோடு பள்ளி சார்பிலும் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் வெளியே தெரிந்ததை அறிந்த சீனிவாசன் அவமானம் தாங்க முடியாமல் டிசம்பர் 16-ம் தேதி எலி பேஸ்ட் விஷத்தை தின்று தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு, சீனிவாசனை மயிலாடுதுறை காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் டிசம்பர் 17-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் பத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்பில்லாத நபர்களின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு பள்ளி நிர்வாகியை இன்ஸ்பெக்டர் சங்கீதா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இன்ஸ்பெக்டர் சங்கீதா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டதால், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சங்கீதா காவல்துறையில் நேரடியாக உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

போக்சோ வழக்கு.., தண்டனைக்கு முன் எடுத்த விபரீத முடிவு!!!

Fri Dec 23 , 2022
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய போக்சோ வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டவர் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பொட்டல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுடலை. 53 வயதான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் […]

You May Like