நாம் அனைவரும் வங்கிக்கு முக்கிய வேலைக்காக சென்றால், அந்த பணியை முடிக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். அதிலும், 12 மணிக்கு மேலே சென்றால் போதும் மதிய உணவு இடைவேளை என காரணம் காட்டி 3 மணி வரை காக்க வைப்பார்கள். கடந்த சில காலங்களாக இது குறித்த மீம்ஸ்களையம் நாம் இணையத்தில் பார்த்திருப்போம்.
மதிய உணவு இடைவேளை என்ற பெயரில் வங்கி ஊழியர்கள் பணியில் அலட்சியம் காட்டுவது நம்மில் பலரின் பொறுமையை சோதித்திருக்கும். ஆனால், வங்கியில் மதிய உணவு இடைவேளையின் உண்மையான விதி என்ன என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. வங்கி ஊழியர்களின் மதிய உணவு இடைவேளை குறித்த உண்மையான தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம். இனி மதிய உணவு இடைவேளை என்று உங்களை அவர்கள் காத்திருக்க கூறினால், இந்த விதிகளைச் சொல்லி காத்திருக்காமல் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்கலாம்.
இந்த விதி எஸ்.பி.ஐ., இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் என அனைத்து வங்கிகளிலும் செல்லுபடியாகும். ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகளின்படி, வங்கிகளுக்கு மதிய உணவு இடைவேளை என்பதே இல்லை. ஆம், உண்மைதான். ஆனால், வங்கிகளில் பணிபுரிவது மனிதர்கள் என்பதால் இந்திய தொழிலாளர் சட்டம் இவர்களுக்கும் பொருந்தும். அதாவது, தொழிலாளர் சட்டத்தின்படி, 8 மணி நேரம் வேலை செய்பவர் அரை மணி நேரம் மதிய உணவு இடைவேளையைப் பெற வேண்டும் என்பதுதான். எனவே, வங்கிகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மணி நேரம் மதிய உணவு இடைவேளை கிடைக்கும். ஆனால், இதற்கும் ஒரு விதி உள்ளது.
அடுத்த முறை நீங்கள் வங்கிக்கு செல்லும் போது, மதிய உணவை காரணம் காட்டி உங்களை அவர்கள் காத்திருக்கச் சொன்னால், இந்த விதி பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். ஆர்.பி.ஐ. விதிகளின்படி, வங்கியில் உள்ள ஒவ்வொரு பணியாளரும் ஒன்றாக ஓய்வு எடுக்க முடியாது. ஷிப்ட் சுழற்சியில், பாதி ஊழியர்கள் ஓய்வு எடுத்தால், பாதி பேர் வேலை செய்வார்கள். எனவே, வாடிக்கையாளர்களை காத்திருக்கும்படி யாரும் கூற முடியாது. வங்கி ஊழியர்களில் பாதி பேர் இடைவேளையின் போது வேலை செய்வார்கள்.
வங்கிகளின் வேலை நேரம் 8 மணி நேரம். அத்தகைய சூழ்நிலையில், தொழிலாளர் சட்டத்தின்படி, வங்கியின் ஊழியர் அரை மணி நேரம் ஓய்வு பெறுவார்கள். SBI வங்கிகள் குறித்த பல விஷயங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில், சமூக வலைதளமான Quora-வில் எஸ்பிஐயின் உண்மையான இடைவேளை நேரத்தை பலர் தேடியுள்ளனர். உண்மையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உணவு இடைவேளை குறித்த எந்த விதியும் இல்லை. இது உங்களை ஏமாற்றும் ஒரு விஷயம் மட்டுமே. இனி வங்கிகளுக்கு சென்றால் தைரியமாக இந்த விதி பற்றி கூறி உங்கள் வேலையை சுலபமாக முடிக்கலாம்.
Read More : ”நான் கூறிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்”..!! பகிரங்க மன்னிப்புக் கேட்டார் கஸ்தூரி..!!