வங்கிக் கணக்கைத் திறப்பதற்கும், பான் அட்டையைப் பெறுவதற்கும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை இப்போது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஒரு முக்கியமான ஆவணமாகும். சரிபார்க்கப்பட்ட அடையாள மற்றும் முகவரிச் சான்றாகச் செயல்படும் ஆதார் அட்டை தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
இந்நிலையில் தான், ஆதார் கார்டை வைத்து தனி நபர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் அடிப்படையிலான லோனில் ரூ.10,000 வரை லோன் வழங்கப்படுகிறது. உடனடியாக பணத் தேவைப்படுவோர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கடனை சம்பளம் பெறுபவர்கள், சுய தொழில் தொடங்குபவர்கள் அல்லது குறைந்த கடன் கொண்ட தனிநபர்கள் பெறலாம். இந்த கடனுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 60 வயதுடையவராக இருக்க வேண்டும். மாதம் குறைந்தபட்சம் ரூ.15,000 சம்பளம் பெற வேண்டும்.
ஆதார் கார்டை வைத்து ரூ.10,000 பெறுவது எப்படி..?
* முதலில் உங்கள் கடன் வழங்குனரைத் தேர்வு செய்ய வேண்டும்.
* ஆதார் கார்டை வைத்து தனி நபர் கடன்களை வழங்கும் வங்கி, NBFC நிறுவனங்கள் அல்லது ஃபின்டெக் தளங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* கடன் வழங்குனரின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அப்ளிகேஷனை பார்வையிட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
* பின்னர், உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு அல்லது வருமானச் சான்று போன்ற பிற தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, கேஒய்சி சரிபார்ப்புக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* உங்கள் விவரங்களை கடன் வழங்குநர் சரிபார்ப்பார்கள். பின்னர், கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
எச்சரிக்கை
இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில தவணைகளை நீங்கள் செலுத்த தவறினால், புகைப்படத்தை தவறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே, இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குனரிடம் கடன் பெற வேண்டும். அதோடு, கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.