10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆதார் அட்டையில், எந்த மாற்றமும் செய்யவில்லை என்றால், உங்கள் ஆதார் அட்டை ரத்து செய்யப்படலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது…
ஆதார் அட்டை என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் ஆகும். இந்த அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை அரசு நலத்திட்டங்கள், வங்கிப் பணிகள், செல்போன் சிம்கார்டு உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆணையமான UIDAI தெரிவித்துள்ளது.. UIDAI இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ பலரின் ஆதார் அட்டைகள் செல்லாதவையாக உள்ளது..
எனவே காலாவதியான ஆதார் அட்டையை வைத்திருக்கும் நபர்கள் இன்னும் e-KYC செயல்முறையை முடிக்கவில்லை.. e-KYC விவரங்களை புதுப்பிக்க உடனடியாக அருகிலுள்ள UIDAI ஆதார் சேவை மையத்திற்குச் செல்லலாம். அது இப்போது கட்டாயமாகிவிட்டது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆதார் அட்டை உருவாக்கப்பட்டதில் இருந்து கணிசமான பகுதி மக்கள் தங்கள் இருப்பிடம், தொலைபேசி எண் அல்லது வேறு எந்த விவரங்களை மாற்றவில்லை. இந்த ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, e-KYC தேவை. அந்த விவரங்களை அப்டேட் செய்ய ரூ.50 செலவாகும்.. பான் கார்டு, வாக்காளர் அட்டை, பயன்பாட்டு பில், பதிவு அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டு ஆவணங்களை அட்டைதாரர் கொண்டு வர வேண்டும். கூடுதலாக, யாரேனும் வேறு மாநிலத்திலிருந்து ஆதார் அட்டை வைத்திருந்தாலும், அவர்களின் தற்போதைய முகவரியை ஆதார் அட்டையில் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் தங்கள் முந்தைய வசிப்பிடத்திற்கான ஆவணங்களை வழங்கலாம். இந்த விவரங்களை புதுப்பிப்பை முடிக்க அவர் உடனடியாக ஆதார் சேவை மையத்திற்கு செல்லலாம். இது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இந்த பணிக்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் தேவைப்படும்.
ஆதார் எண் இல்லாத நபர்கள் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற முடியாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் UIDAI அறிவித்தது… ஆதார் எண் இல்லாதவர்கள் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதை கடினமாக்கும் வகையில், அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு UIDAI சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..