பலரின் வீடுகளில் இருக்கும் பெரிய பிரச்சனை பல்லிகள். ஆம், பேய்க்கு கூட பயம் இல்லை, ஆனால் பல்லிக்கு பயம் என்று கூறுபவர்கள் அநேகர். இவர்களுக்கு பெரிய ஆசையே எப்படியாவது பல்லியை துரத்தி விட வேண்டும் என்பது தான். பல்லிகள் சுவரில் இருக்கும் பூச்சிகளை உண்பதன் மூலம் நமக்கு ஒரு வகையில் உதவினாலும், பல நேரங்களில் சமையல் அறையில் உள்ள உணவுகளில் பல்லிகள் விழுந்து விடுமோ என்ற பயம் இருப்பது உண்டு. மேலும், பலருக்கு பல்லியை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்.
பலர் பல முயற்சிகளை செய்து விட்டேன், ஆனால் பல்லியை துரத்த முடியவில்லை என புலம்புவது உண்டு. இதற்க்கு பல நூறு ரூபாய் செலவு செய்து மிஷின் வாங்கியும் பயன் இருக்காது. அப்படி நீங்களும் பல முயற்சிகளை செய்தும் எதுவும் பயன் தரவில்லையா?? அப்போது இதை செய்து பாருங்கள்..
பிளாக் பெப்பர் ஸ்ப்ரே பல்லியின் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடும். அதனால் பல்லி நடமாட்டம் உள்ள இடங்களில் இருக்கும் சுவர்களில் அதை அடித்து விட்டால், பல்லிகள் அவ்விடத்தை விட்டு ஓடிவிடும். நாப்தலீன் பந்துகளின் வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. அதன் வாசனை பல்லிகளை பயமுறுத்துவதால் பல்லிகள் அதன் கிட்டயே நெருங்காது. பல்லிகள் நடமாடும் சுவர்களுக்கு அருகில் முட்டை ஓடுகளை வைத்தால் அதன் நாற்றம் பல்லிகளை விரட்டிவிடும். மற்றும் ஒரு எளிய முறை, வெங்காயத்தை நறுக்கி அது நடமாடும் சுவற்றின் அருகில் வைத்தால் பல்லிகள் விரைவில் மறையும்.