fbpx

உங்கள் வீட்டில் நாப்தலின் உருண்டைகள் இருந்தால் தூக்கி வீசிடுங்க..!! உயிரையே பறிக்கும் அபாயம்..!!

நம் வீடுகளில் பூச்சிகளின் தொல்லையில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துகிறோம். இவை நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் வாசனை பொருட்களும் கலந்து தயாரிக்கப்படும் உருண்டைகள் ஆகும். இவற்றில் இருந்து வெளியேறும் வாயுவினால் பூச்சிகள் இவை இருக்கும் இடத்திற்கு வராது.

இதனால் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களிலும் நாம் துணிகள் வைத்திருக்கும் அலமாரி போன்றவற்றிலும் இந்த உருண்டையை பூச்சிகளில் இருந்து நம் பொருட்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்துகிறோம். இந்த உருண்டைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் நமக்கு இருக்கக்கூடிய ஆபத்து விளைவிக்க கூடிய கடும் வியாதிகள் வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நாட்களில் உருண்டைகளை தொடர்ந்து பயன்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளியேறும் வாயுவை நாம் சுவாசிக்க நேர்கிறது. இதனால் வாந்தி தலைசுற்றல் மயக்கம் ரத்த சோகை ஆகியவை ஏற்படுகின்றன.

இவற்றால் ரத்த அணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் ரத்த புற்று நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒருமுறை இந்த நாப்தலின் உருண்டைகளின் வாயுவை சுவாசிப்பது 0.0002 மில்லி கிராம் நாப்தலின் உருண்டைகளை சாப்பிடுவதற்கு சமம் என மருத்துவர் ஆட்சிகள் தெரிவிக்கின்றன. இவற்றை வீடுகளில் பயன்படுத்தும் போது நாம் தொடர்ந்து சுவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .

இதன் காரணமாக இந்த வாயுக்கள் நம் உடலில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இரத்தப் புற்று நோய் ஏற்படும் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை தவிர்த்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

Read More : போக்சோ வழக்கில் சிக்கிய 23 அரசுப் பள்ளி ஆசிரியர்களும் குற்றவாளிகள்..!! அதிரடியாக டிஸ்மிஸ் செய்த பள்ளிக்கல்வித்துறை..!!

English Summary

We use mothballs to protect ourselves from insect infestations in our homes.

Chella

Next Post

தரையில் படுத்து தூங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? அப்படினா இந்த செய்தி உங்களுக்குத்தான்..!!

Wed Mar 12 , 2025
Some people fall asleep only when they lie in bed, while others fall asleep when they lie on the floor.

You May Like