உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை மறைய செய்யவும் வயிற்றைச் சுற்றி உள்ள ஊளை சதையை குறைக்கவும், அதிக உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் இந்த பொடி மிகவும் பயன்படும். இந்த பொடியை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். இந்த பொடியை தயாரித்து தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடித்து வரலாம்.
இதனால் பானை போல இருந்த வயிறும் மள மளவென கரையை ஆரம்பிக்கும். மேலும், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளும் இருக்காது. இந்த பொடியை எப்படி தயார் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சீரகம் – 1 கப்
ஓமம் – 1 கப்
சோம்பு – 1 கப்
செய்முறை
* முதலில் ஒரு சிறிய கப் அளவு சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதில் ஓமம் சேர்க்க வேண்டும். ஓமத்தில் கால்சியம், பொட்டாசியம் என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அடுத்து சேர்க்கக்கூடிய பொருள் சோம்பு. இவை மூன்றையும் ஒரே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளவும்.
* இந்த 3 பொருளையும் நன்றாக வாணலியில் வறுத்து சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்து காற்று போக முடியாத பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
* இந்த பொடியை தினமும் காலை, மாலை உணவிற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* ஒரு டம்ளரில் சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் அரைத்த பவுடரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதை உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ளவும்.
* உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அளவு எடை குறையும்.