fbpx

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.2 கோடி கிடைக்கும்..!! எப்படி தெரியுமா..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள் மற்றும் பத்திரங்கள், குறுகியகால சந்தை பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது ஆகும். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்று திரட்டி உருவாக்கப்படுகிறது. பொதுவாக முதலீட்டு நோக்கத்தை கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே பணத்தை திரட்டும் ஒரு அமைப்பாக இது இருக்கிறது.

உங்களால் இப்போதில் இருந்தே சிறிய தொகையை நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால், ஓய்வு காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய தொகையை பெற முடியும். இப்போது உங்களுக்கு 37 வயதாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் 60 வயதில் இது 2 கோடி வரை சம்பாதிக்கும் பணமாக மாறும். மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை முதலீடு செய்ய முடிந்தால் மிக எளிதாக இந்த இலக்கை அடைய முடியும். புதிதாக இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எஸ்ஐபி முதலீடு சிறந்த தீர்வாக இருக்கும்.

உங்களால் 15 முதல் 23 வருடங்கள் வரை தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் இரண்டு கோடி லாபம் என்பது சுலபமான ஒன்றுதான். 12% முதல் 15% வரை உங்களுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். ஆக்சிஸ் புளூசிப் மியூச்சுவல் ஃபண்ட், டிஎஸ்பி மிட்கேப் ஃபண்ட், கனரா ரெபெகோ ஈக்விட்டி டைவெர்சிஃபைடு ஃபண்ட், எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலமாக உங்களது ஓய்வுக் காலத்தில் ரூ.2 கோடி வரையில் சம்பாதிக்கலாம். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்த லாபத்தை கொடுக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

லவ் டார்ச்சர் செய்த வாலிபர் பிளஸ்1 மாணவி எடுத்த விபரீத முடிவு….! காவல்துறையினர் அதிரடி விசாரணை…..!

Tue Apr 25 , 2023
காதல் என்பது ஒருவித உணர்வு அதனை கட்டாயப்படுத்தியோ மிரட்டியோ ஒருவருக்கு இன்னொருவர் மீது வரவைத்து விடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அந்த அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இத்தகைய நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் […]

You May Like