fbpx

வெறும் ரூ.210 முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.5,000 கிடைக்கும்..!! அரசின் சூப்பர் திட்டம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

குடிமக்களின் நிதி நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்க்கையில் போதுமான பொருளாதார ஆதரவை வழங்கக்கூடிய வகையில் அரசால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சேமிப்பு திட்டம் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். இத்திட்டம் ஓய்வுக்குப் பிறகு பென்ஷன் வழங்கக்கூடிய ஒரு திட்டம். இதன் மூலம் தனி நபர்கள் ஓய்வு பெற்ற காலத்திற்குப் பிறகும் சுயமரியாதையுடன், தங்களுக்கான செலவுகளை தாமே கவனித்துக் கொண்டும், பொருளாதாரப் பிரச்சனை இல்லாமலும் வாழ்வதற்கு உதவுகிறது.

அடல் பென்ஷன் யோஜனா

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் வயதிற்கு ஏற்ற முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, ரூபாய் 1,000, 2000, 3000 மற்றும் ரூபாய் 4,000 வரையிலும், அதிகபட்சமாக ரூ.5,000 வரையிலான பென்ஷன் தொகையை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். .

முதலீடு செய்ய தகுதியானவர்கள்

கடந்த 2015ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், சீரமைக்கப்படாத துறையை சேர்ந்த நபர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது அனைத்து துறையை சேர்ந்த 18 வயது முதல் 40 வயதிலான இந்திய மக்கள் அனைவரும் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 60 வயதிற்கு பிறகு பென்ஷன் தொகையை பெறுவார்கள்.

ரூ.3,000 பென்ஷன்

உதாரணமாக உங்களது மனைவிக்கு 25 வயது ஆகிறது என்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் APY அக்கவுண்டில் ரூ.226 டெபாசிட் செய்ய வேண்டும். உங்களது மனைவிக்கு 39 வயது ஆகிறது என்றால் நீங்கள் ரூ.792 ஒவ்வொரு மாதமும் அக்கவுண்டில் செலுத்த வேண்டும். உறுதியளிக்கப்பட்ட மாத பென்ஷன் தவிர அக்கவுண்ட் ஹோல்டர் இறந்துவிடும் பட்சத்தில் நாமினிக்கு வாழ்நாள் முழுவதும் மாத பென்ஷன் தவிர ரூ.5.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 பென்ஷன்

18 வயதில் ஒரு நபர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணையும்போது, அவர் 60 வயது ஆன பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 பென்ஷன் தொகையாக பெறுவதற்கு மாதந்தோறும் ரூ.210 டெபாசிட் செய்ய வேண்டும்.

முதலீடு செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்..?

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். ஒருவர் ஒரே ஒரு அடல் பென்ஷன் அக்கவுண்ட் மட்டுமே வைத்திருக்க முடியும். எவ்வளவு சீக்கிரமாக இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிக பலன்களை பெறுவீர்கள்.

சலுகைகள் :

இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரிச் சட்டம் 80C -இன் கீழ் 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை பெறுவார்கள். முதலீடு செய்த நபர் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இறந்துவிட்டால் அவரது குடும்பம் தொடர்ந்து பலன்களை பெற்று வருவார்கள்.

Chella

Next Post

’இனி பெட்ரோல் போட தேவையில்லை’..!! 100% எத்தனாலில் இயங்கும் இன்னோவா கார் இன்று அறிமுகம்..!!

Tue Aug 29 , 2023
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று டொயோட்டா நிறுவனத்தின் 100% எத்தனால் எரிபொருளைக் கொண்டு இயங்கும் இன்னோவா காரை வெளியிடுகிறார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதிக புகையை கக்கும் வாகனங்களை மத்திய அரசு படிப்படியாக கட்டுப்படுத்தி வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்த கார் அதிக அளவில் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாற்று எரிபொருளில் இயங்கும் […]

You May Like