தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த தேர்வாக மாறியுள்ளது.. பலரும் தங்கள் பணத்தை பாதுகாப்பான விருப்பங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்… எனவே சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தபால் அலுவலகங்கள் வழங்குகிறது.. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு (RD).. போஸ்ட் ஆஃபீஸ் RD கணக்கைத் திறப்பது எளிதானது மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது குழந்தைக்கும் கிடைக்கும். குறைந்தபட்ச மாதாந்திர வைப்புத் தொகை ரூ. 100 ஆகும்..
மேலும் இந்த திட்டத்ட்குக் தங்கள் பங்களிப்பை ஒவ்வொரு மாதமும் ரூ.10 மடங்காக அதிகரிக்கலாம். தபால் அலுவலகம் RD 5.8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் அதன் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் தீர்மானிக்கிறது. எனவே வட்டி விகிதம் மாறுபடும்..
கணக்கு துவங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு, டெபாசிட் இருப்பில் 50 சதவீதம் வரை எடுக்கலாம். கூடுதலாக, கணக்கைத் தொடங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு, டெபாசிட் செய்தவர்கள் டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரை கடனாகப் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் ரூ.333 முதலீடு செய்வதன் மூலம், தற்போதைய 5.8 சதவீத வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ.16 லட்சத்தை வருமானமாகப் பெறலாம். 10 வருடங்களுக்கான மொத்த வைப்புத்தொகை ரூ.12 லட்சமாகவும், மதிப்பிடப்பட்ட வருமானம் சுமார் ரூ.4.26 லட்சமாக இருக்கும், இதன் விளைவாக மொத்தம் ரூ.16.26 லட்சம் வருமானம் கிடைக்கும்.