கோழி கால்கள் தோல், குருத்தெலும்பு, தசைநாண்கள் மற்றும் எலும்புகளைக் கொண்டிருக்கும். இருப்பினும், அவை இன்னும் சத்தானவை மற்றும் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன.
70 கிராம் கோழி காலில் உள்ள ஊட்டச்சத்துகள்…
கலோரிகள் : 150
புரதம் : 14 கிராம்
கொழுப்பு : 10 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் : 0.14 கிராம்
கால்சியம் : தினசரி மதிப்பில் 5% (DV)
பாஸ்பரஸ் : 5% DV
வைட்டமின் ஏ : 2% DV
ஃபோலேட் (வைட்டமின் B9) : 15% DV
கோழி கால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
கோழி காலில் இருக்கும் கொலாஜன் என்ற பொருளின் காரணமாக சருமமமனது நன்றாக சீர்படுகிறது. சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்க கோழி காலை சாப்பிட்டு வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கோழி காலில் இருக்கும் கொலாஜன் அதிகளவு இருக்கும் காரணத்தால் நமது உடலுக்கு தேவையான புரோட்டின் மற்றும் கால்சிய சத்துக்களை அதிகரிப்பதற்கு உதவுகிறது.
இதன் மூலமாக நமது உடலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கிறது. நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கொலாஜெனின் மூலமாக வெளியேற்றப்பட்டு, நமது உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், நமது எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெற்று, எலும்புகள் வலுப்பெறுகிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதுகாக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
அதுமட்டுமின்றி, நமது உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்படும் பட்சத்தில், அந்த காயங்கள் அனைத்தும் விரைவில் குணமாகும். நமது நகங்களுக்கு அதிகளவு வலு மற்றும் பற்களின் ஈறுகளை வலுப்படுத்துவது போன்ற நன்மைகளை செய்கிறது. மேலும், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது. இன்சுலின் உற்பத்திக்கு உதவும் ஒரு ஹார்மோனான குளுகோகன் போன்ற பெப்டைட்-1 (GLP-1) ஐ தூண்டுவதன் மூலம் கோழி கால் புரதங்கள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொலாஜன் எலாஸ்டினுடன் தமனிகள் மற்றும் நரம்புகளுக்கு தேவையான ஒரு அங்கமாகும். இதய நோயைத் தடுக்க நல்ல எலாஸ்டின் மற்றும் கொலாஜன் விகிதம் அவசியம்.
Read More : ’நீங்க பண்ற பெரிய தப்பே இதுதான்’..!! பெண்களிடையே புற்றுநோய் அதிகரிக்க இதுதான் முக்கிய காரணமாம்..!!