fbpx

மக்களே… இந்த தவறை செய்தால் ரேஷன் கடையில் அரிசி கிடையாது…! செக் வைத்த தமிழக அரசு…!

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ விற்று அதிக லாபம்‌ ஈட்டும்‌.நோக்கத்துடன்‌ செயல்பட்டு வருகின்றனர்‌.

உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ குடிமைப்‌ பொருள்‌ குற்றப்‌ புலனாய்வுத்‌ துறை அலுவலர்கள்‌ தொடர்‌ ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கலில்‌ ஈடுபடுவோர்‌ / உடந்தையாக செயல்படுவோர்‌ மீது, இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ சட்டம்‌,1955 மற்றும்‌ தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின்‌ கீழ்‌ வழக்கு பதிவு செய்து உரிய மேல்‌ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்‌.

மேலும்‌, தொடர்‌ குற்றச்‌ செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ கள்ளச்சந்தை தடுப்பு மற்றும்‌ இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ வழங்கல்‌ பராமரிப்பு சட்டம்‌, 1980ன்‌ படி அவ்வப்போது தடுப்பு காவலிலும்‌ வைக்கப்பட்டு வருகின்றனர்‌. கடந்த 01.05.2023 முதல்‌ 31.05.2023 வரையிலான ஒரு மாத காலத்தில்‌ கள்ளச்சந்தையில்‌ விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.8,44,594/- மதிப்புள்ள 2447 குவிண்டால்‌ பொது விநியோகத்திட்ட அரிசி, 269 எரிவாயு உருளைகள்‌, 180 கிலோ கோதுமை, 1100 கிலோ துவரம்பருப்பு, மண்ணெண்ணெய்‌ 450 லிட்டர்‌ ஆகியவையும்‌, மேற்கண்ட கடத்தலுக்கு பயண்படுத்தப்பட்ட 150 வாகனங்களும்‌ கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.

குற்றச்செயலில்‌ ஈடுபட்ட நபர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்‌. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும்‌ இன்றியமையா பண்டங்கள்‌ சட்டம்‌ 1980 ன் கீழ்‌ 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்‌. இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கல்‌ தொடர்பாக பொது மக்கள்‌ 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார்‌ தெரிவிக்கலாம்‌.

Vignesh

Next Post

சூப்பர் வாய்ப்பு...! UPSC பயிற்சி வகுப்பு... மாதம் ரூ.3,000 ஊக்கத் தொகை..! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

Fri Jun 16 , 2023
சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, […]

You May Like