fbpx

5 லட்சம் கொடுத்தால் நியாய விலைக் கடையில் வேலை!!! ஷாக்கான பதில் கொடுத்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள்…!

மயிலாடுதுறை மாவட்டம், கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழந்தூர் நியாய விலைக் கடையில், எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், அனிதா என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், விற்பனையாளர் பணிக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது தகுதியுடையோர் ஏராளமாக உள்ள நிலையில், உரிய தகுதியைப் பெறாத அனிதா என்பவர் எந்த தேர்வு நடைமுறையும் பின்பற்றப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகார் தெரிவித்த போது, 5 லட்சம் ரூபாய் கொடுத்து இப்பணியை பெற்றதாக அனிதா தெரிவித்ததாகவும், தனது புகாருக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள், “அனிதா என்ற பெயரில் எந்த விற்பனையாளரும் பணியாற்றவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர்களை, முறையான தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அனிதாவை பணியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kathir

Next Post

காசு தரலைன்னா போக்சோ வழக்கு..! பள்ளி நிர்வாகியை மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர்!!!

Fri Dec 23 , 2022
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தொடர்பில்லாத பள்ளி நிர்வாகியின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மயிலாடுதுறை நகரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த சேந்தங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் (34) என்ற ஆசிரியர் மாணவர்களுக்கான விடுதியில் […]

You May Like