fbpx

ரூ.1,750 செலுத்தினால்.. மத்திய அரசு ரூ.1 லட்சம் கடன் வழங்குகிறதா..? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன..

பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.. அந்த செய்தியில் “ முத்ரா கடன் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கடனின் விவரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 36 மாத காலத்திற்கு ரூ.1 லட்சம் கடனாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடன் ஒப்பந்தக் கட்டணமாக ரூ.1,750 செலுத்தினால் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தி போலியானது என்று பத்திரிகை தகவல் பணியகமான PIB, விளக்கம் அளித்துள்ளது. மேலும், மத்திய அரசு எந்த ஒரு உதவியையும் அறிவிக்கவில்லை என்றும் பிஐபி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் PIB “கடன் ஒப்பந்தக் கட்டணமாக ரூ. 1,750 செலுத்தினால், PM முத்ரா யோஜனாவின் கீழ் ரூ. 1,00,000 கடன் வழங்க ஒப்புதல் கடிதம் கூறுகிறது. இந்தக் கடிதம் போலியானது. மத்திய நிதி அமைச்சகம் இந்தக் கடிதத்தை வெளியிடவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை மக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்று PIB அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.

PIB மூலம் செய்திகளை உண்மைச் சரிபார்ப்பது எப்படி..? இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம்.. அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற இணையதள முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். மேலும் +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். அந்த செய்தி குறித்த உண்மை தன்மையை PIB வெளிப்படுத்தும்..

Maha

Next Post

சாவுக்கு வந்த சித்தப்பாவுக்கு கொலைகார பட்டம்..!! பில்லி சூனியத்தை நம்பி கொலையாளியான இளைஞர்..!!

Tue Jan 31 , 2023
காசநோயால் உயிரிழந்த தந்தை பில்லி சூனியத்தால் கொல்லப்பட்டதாக கருதி, தூங்கிக் கொண்டிருந்த சித்தப்பாவை கொலை செய்த இளைஞர், கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன், இவரது இளைய சகோதரர் ஆறுமுகம். இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த […]

You May Like