fbpx

ஒரு துணியில் கொடியை ஏற்றி விட்டால் நாட்டுப்பற்று வந்துவிடுமா..? – சீமான்

ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ”அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்களோ, அப்பொழுது தான் நாடு உருப்படும். ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார். ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே? அப்பொழுது அது சார்ந்து நிகழ்வுகளும் அதை சார்ந்த தலைவர்களும் தானே அவரை சந்திப்பார். ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை
சந்தித்து அரசியல் பேசலாம். அரசியல் பேசாதவன் மனிதராக இருக்க முடியாது என்கிறார் காந்தி. மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல் தான். அந்த உரிமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. மேலும் ஆளுநருடன் அரசியல் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஒரு துணியில் கொடியை ஏற்றி விட்டால் நாட்டுப்பற்று வந்துவிடுமா..? - சீமான்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போராட்டத்தை திணித்தது யார்? நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்றால், தற்போது எப்படி நிர்வாகத்திற்கு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். போராட்டத்திற்கு பிறகு தானே நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இப்போது தான் 4ஜி பிஎஸ்என்எல்-க்கு கொடுத்துள்ளீர்கள். 5ஜியை முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள். சுதந்திர தினத்தன்று எல்லாருக்கும் வீடு இருக்கும் என்று கூறினீர்களே வீட்டை காட்டுங்கள். ஒரு துணியில் கொடியை ஏற்றி விட்டால் நாட்டுப்பற்று வந்துவிடுமா? மின்சார சட்டத்திருத்தம் பேராபத்தானது. அத்தியாவசிய பயன்பாடான மின்சாரத்தை தனியாருக்கு கொடுப்பதா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Chella

Next Post

ரஜினியுடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்; ரசிகர்கள் எதிர்பார்ப்பில்...படையப்பாவிற்கு பிறகு ஜெயிலர்..!

Thu Aug 11 , 2022
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துக்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதை உறுதி செய்து கடந்த பிப்ரவரி மாதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். சமீபத்தில் இந்த படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்தனர். மேலும் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று வந்த ரஜினிகாந்திடம் இதுபற்றி கேட்டபோது ஜெயிலர் படத்தில் அடுத்ததாக நடிக்க […]

You May Like