நடிகை என்றால் நாம் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும் என்றும் அதைவிட்டுவிட்டு சேலை கட்டிக்கொண்டு ஒரே மாதிரி நடித்தால் அது சரியாக இருக்காது என்று விருமாண்டி பட நடிகை அபிராமி பேசியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அபிராமி, தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். 2004ம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. கதை, திரைக்கதை, இளையராஜாவின் இசை, மேக்கிங், கமலின் நடிப்பு என அனைத்துவிதத்திலும் விருமாண்டி படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். அன்னலெட்சுமி என்ற கேரக்டரில் நடித்த அபிராமிக்கு விருமாண்டி பெரியளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. மலையாள நடிகையான அபிராமி, தமிழில் தோஸ்த் திரைப்படம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழில் கார்மேகம், சமஸ்தானம் போன்ற படங்களில் நடித்த அவருக்கு, விருமாண்டி தான் லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமாக அமைந்தது. இருப்பினும் அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அபிராமி தனக்கு 17 வயது இருக்கும்போது 40 வயது பயனுக்கு அம்மாவாக நடித்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” நடிகை என்றால் எந்த கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் அதில் நடிக்கவேண்டும். என்னை எல்லாம் கேட்டீர்கள் என்றால் கிட்டத்தட்ட எனக்கு ஒரு 17 வயது இருக்கும்போது 40 வயது பயனுக்கு அம்மாவாக நடித்தேன். அது திரைப்படம் இல்லை ஒரு சீரியலில் நடித்தேன். அது தான் எங்களுக்கு வாழ்வை கொடுக்கிறது. ஏனென்றால், நடிகை என்றால் நாம் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும்.
அப்படி நடித்தால் மட்டும் தான் பார்க்கும் மக்களுக்கும் போர் அடிக்காது ஒரு நடிகையாக எனக்கும் போர் அடிக்காது. அதைவிட்டுவிட்டு சேலை கட்டிக்கொண்டு ஒரே மாதிரி நடித்தால் அது சரியாக இருக்காது” எனவும் அபிராமி தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் 17 வயதில் 40 வயது பயனுக்கு அம்மாவாக நடித்தேன் என்று சொல்லும்போது உங்கள் மனதில் வேதனை இருந்தது தெரிகிறது என கூறிவருகிறார்கள்.