இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் உள்ளன. உதாரணமாக சில விஷயங்களை பார்ப்பது நல்ல சகுனம் என்றும், சில விஷயங்களை பார்ப்பது கெட்ட விஷயங்கள் நடக்கப் போவதற்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் சகுன சாஸ்திரத்தில் பல்வேறு மங்களகரமான மற்றும் அசுப நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியது. நமது சுற்றுப்புறங்கள் அன்றாட நடைமுறைகளுக்கு மத்தியில் அடிக்கடி கவனிக்கப்படாமல் இருக்கும் விஷயங்கள் உள்ளன.
வேதங்கள், புராணங்கள், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற வேத நூல்களிலிருந்து பெறப்பட்ட, சகுன சாஸ்திரம், காலையில் நாம் பார்க்கும் சில விஷயங்கள் மங்களகரமான அல்லது அபசகுணம் விளைவுகளை முன்னறிவிக்கும் என்று கற்பிக்கிறது.
இந்து சமய நூல்கள் நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து, நல்லொழுக்க வாழ்வுக்கான ஞானத்தை வழங்குகின்றன. சில கருத்துக்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவையாக இருந்தாலும், சில விஷயங்களுக்கு மறைமுக அர்த்தங்கள் இருக்கின்றன. இதுகுறித்து சகுன சாஸ்திரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், மங்களத்தையும் வெற்றியையும் தருவதாக நம்பப்படும் ஏழு அறிகுறிகளைப் பற்றி பார்க்கலாம்..
- வேலைக்குச் செல்லும் முன் திருமணமான பெண் அல்லது பசுவைச் பார்ப்பது நல்ல சகுனமாகும். இது உங்களுக்கு வெற்றி வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
- வீட்டை விட்டு கிளம்ப தயாராகும் போது பணம் கீழே விழுந்தால், அது கெட்ட சகுனம் என்று நம்பப்படுகிறது. இதனால் உங்களுக்கு அதிக செலவுகள் அல்லது நிதி இழப்பு ஏற்படலாம் என்பதை குறிக்கிறது.
- காலையில் ஒரு பிச்சைக்காரனைச் சந்திப்பது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. இது உங்களுக்கு பண வரவு மற்றும் நிதி ஆதாயங்கள் ஆகியவற்றை குறிக்கிறது. நீங்கள் வழங்கிய கடன் தொகை விரைவில் கிடைக்கும் என்பதையும் குறிக்கிறது.
- காலை எழுந்த உடன் ஒரு கீரிப்பிள்ளையை பார்த்தால் அது நல்ல சகுனமாம். அது யோகத்தையும், அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்றும் கருதப்படுகிறது. இதனால் உங்களுக்கு பண வர அதிகரிக்குமாம்.
- வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வெல்லம் அல்லது இனிப்புகளை எடுத்துச் செல்லும் நபர்களை பார்ப்பது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இது எதிர்பாராத லாபத்தைக் குறிக்கிறது.
- உங்கள் மகளுக்கு வரன் தேட செல்லும் போது, சிரிக்கும் கன்னிப் பெண்களைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் உங்கள் மகளுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைக்கும் என்பதையும் இது குறிக்கிறது.
- நீங்கள் வெளியே செல்லும் போது பறவைகளின் எச்சங்கள் உங்கள் மீது விழுந்தால் அது அபசகுணமாகும். இது உங்கள் பணம் தொடர்பான சிக்கல்கள் அல்லது பணம் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதை குறிக்கிறது.
Read More : வீட்டின் இந்த இடங்களில் கண்ணாடி வைத்தால்… வாஸ்து தோஷம் நீங்கி.. பணம் பெருகுமாம்..