fbpx

’தமிழ்நாட்டில் வாலாட்ட வேண்டுமென நினைத்தால், வால் நறுக்கப்படும்’..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட வேண்டும் என்று நினைத்தால் வாலை நறுக்கப்படுவதோடு உதைப்படுவார் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க உள்ளார். இதுகுறித்து ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

’தமிழ்நாட்டில் வாலாட்ட வேண்டுமென நினைத்தால், வால் நறுக்கப்படும்’..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் எச்சரிக்கை..!

இக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “ராகுலின் பாதயாத்திரை மூலம் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிக மோசமாக நடந்து கொள்ளவதாகவும், காங்கிரஸ் கட்சியினரை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட மாட்டோம் அதற்கு பதிலாக உதைப்போம் என்றார். மிகப்பெரிய தலைவர்கள் இருந்த தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட வேண்டும் என்று நினைத்தால் வால் நறுக்கப்படுவதோடு உதைப்படுவார் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் ஓட்டுவாங்குவதற்காக கோயிலுக்கு செல்வதாகவும், இப்போது எல்லாம் பணத்திற்காக தான் மக்கள் ஓட்டு போடுவதால் அரசியல்வாதிகளை அயோக்கியன் என சொல்ல மக்களுக்கு உரிமை இல்லை” என்று கூறினார்.

Chella

Next Post

”நாட்டைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் காங்கிரஸ்”..! அமித்ஷா விமர்சனம்

Sun Sep 4 , 2022
காங்கிரஸ் இந்த நாட்டைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக அமித்ஷா விமர்சித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். மேலும், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் […]
நாடு முழுவதும் அதிரடி ரெய்டு..!! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!! அடுத்து நடக்கப்போவது என்ன?

You May Like