fbpx

இந்த ஆடைகளை அணிந்தால் கோடைக்காலத்திற்கு சும்மா ஜம்முனு இருக்கும்…!

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலை இறுக்காத வகையிலான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இது உடலுக்கு இதமானதாக இருக்கும்.

கோடைக்காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெளியே சென்றுவருவதற்குள் படாதபாடுபட வேண்டும். முதலில் நாம் ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சரியான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். வீட்டில் இருந்து வெளியே செல்லும் அனைவரும் கோடைக்கு ஏற்றவாறு அடர் நிறங்களை விட, வெளிர் நிற ஆடைகளை தேர்வு செய்வது நல்லது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன மாதிரியான ஆடைகளை அணியலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..!

இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளைதான் நம் உடலில் நல்ல குளிர்ச்சியையும் இதமான சூழலையும் ஏற்படுத்துகிறது. கோடைக்கு ஏற்ற உடையாக பருத்தியிலான காட்டன் புடவைகளை அணியலாம். பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக்கொள்ளும் தன்மைப் பெற்றது.மேலும் நம் உடலில் வெளியேரும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது.கிட்டத்தட்ட ஆட்டோமேட்டிக் டவலைப் போல் செயல்பகிறது. பருத்தி ஆடையை புடவை, சுடிதார், பாவடை போன்று அணியலாம். நாம் வீட்டில் இருக்கும்போது தளர்வான ஆடைகளை பயன்படுத்தினால் உடல் எரிச்சல், வியர்வை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம். நீங்கள் வெளியே செல்லும்போது முடிந்த அளவு காட்டன் சட்டைகளை தளர்வாக அணிந்து செல்வது முக்கியம். அப்படி அணிந்து சென்றீர்கள் என்றால் வெப்பத்தின் தாக்கத்தை நீங்கள் சற்று குறைவாகவே உணர்வீர்கள். காரணம் காட்டன் சட்டையில் நன்று காற்றோட்டமாக இருக்கும் அதுவும் தாராளமான சண்டை என்றால் வெயிலின் சிக்கல் இருக்காது. மேலும் இரவில் தூங்கும்போது பெண்களும் அரைக்கால் சட்டை, லுங்கி, ஸ்கர்ட் போன்ற ஆடைகளை அணியலாம். இது நல்ல இதமாக இருக்கும்.

பொதுவாக கோடை காலத்திற்கு ஏற்ற நிறம் வெள்ளைதான். வெள்ளை நிறம் சூரிய வெப்பத்தை வெளித்தள்ளும், கறுப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும் என்று சொல்வார்கள். மோனோ குரோமேட்டிக் ஆடைகள் கறுப்பும், வெள்ளையும் கலந்த கலவை. பொதுவாக கட்டம்போட்ட ஆடைகளுக்கு கோடைக்காலத்தில் நல்ல மவுசு உண்டு.முடிந்தவரை கோடையில் வெள்ளை உடைகளையும் லைட் கலர் உடைகளையும் அணியுங்கள். ‘இந்த கலருக்கு இந்த கலர்தான் பொருத்தமாக இருக்கும்’ என்ற பொதுவாக கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படியல்ல, அதற்கு நேர் எதிரான கலரைக்கூட அணியலாம். சிந்தடிக், பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் கூட வரலாம். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்து விதமான உடல் அமைப்புகளுக்கும் ஏற்ற உடை என்றால் அது காட்டன் தான். அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம் பருத்தியிலேயே இருக்கிறது. முடிந்த அளவு நீங்களும் காட்டன் உடைகளை அணிய முயலுங்கள். இந்த வெயிலை பருத்தியால் ஆன காட்டன் உடைகளை அணிந்து சமாளியுங்கள்..!

Rupa

Next Post

பெற்றோர்களே அலர்ட்…! கட்டாயம் உங்க குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch சொல்லிக் கொடுங்க..! எப்படி தெரியுமா?…

Sun Apr 21 , 2024
உங்கள் குழந்தைக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து சொல்லிக் கொடுப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் முக்கியமான ஒன்று என்றால் அது குழந்தைகளுக்கு நல்ல மற்றும் கெட்ட தொடுதல் (Good Touch, Bad Touch) பற்றி உங்கள் பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பது தான். இது அவர்களின் உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், கவனமாகவும், […]

You May Like