fbpx

’நீ உயிரோட இருந்தா நாங்க உல்லாசமா இருக்க முடியாது’..!! அம்மாடியோவ் என்னா நடிப்பு..!! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அருகே சிக்கரூர் என்ற கிராமம் உள்ளது. இங்குதான் சாதிக் (30) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சல்மா (25). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இது இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும், திருமணத்திற்கு முன்பு ஜாபர் என்பவரை சல்மா காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து தெரிந்த சாகித், சல்மாவை கண்டித்து இந்த பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், சாதிக் சொல்வதை சல்மா கேட்கவில்லை. இதனால் தம்பதி இடையே தகராறு தொடர்ந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சல்மாவுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவனை கொலை செய்ய முடிவு செய்து கள்ளக்காதலன் ஜபரிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.

அவரும் சாதிக்கை கொல்ல சம்மதித்தார். அதன்படி, சம்பவத்தன்று இரவு சல்மாவும், ஜாபரும் சேர்ந்து சாதிக்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் சாதிக்கை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சாதிக் துடித்து இறந்தார். அவரை தாறுமாறாக குளியலறைக்கு இழுத்துச் சென்று அவர் உடம்பில் இருந்த ரத்தக் கறைகளை எல்லாம் கழுவியுள்ளனர். இதையடுத்து, சல்மா அக்கம் பக்கத்தினரிடம் ஓடி வந்து, சாதிக் குளியலறையில் தவறி விழுந்து விட்டதாக நாடகம் ஆடினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சாதிக்கின் குடும்பத்தினர் சாதிக்கின் சடலத்தை எடுத்து வந்து கதறி அழுதனர். அவர்களும் இறுதிச்சடங்கு செய்து சாதிக்கின் உடலை அடக்கம் செய்தனர். இதை கவனித்த சாதிக்கின் சகோதரர் அப்போதுதான் சாதிக் குளியலறையில் தவறி விழுந்து இறந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சல்மாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் ஜாபருடன் சேர்ந்து சாதிக்கை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவத்தை கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.

Read More : கொத்தனாருடன் கள்ளக்காதல்..!! முதல் காதலன் வேலைக்கு சென்றதும் 2-வது காதலனுடன் உல்லாசம்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

English Summary

The forger has decided to kill her husband for obstructing the forgery and has told Jabar about this.

Chella

Next Post

’வேலைக்கு செல்லும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லையாம்’..!! ஏன் தெரியுமா..? வெளியான ஆய்வு முடிவுகள்..!!

Sat Oct 5 , 2024
In a study published by IZA - Institute of Labor Economics, it is reported that working women are avoided in Indian marriages.

You May Like