fbpx

சர்வதேச திரைப்பட விழா…! 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது….!

சர்வதேச திரைப்பட விழாக்களை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்பான சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (எஃப்.ஐ.ஏ.பி.எஃப்) அங்கீகாரம் பெற்ற உலகின் 14 மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்றாகும்.

கேன்ஸ், பெர்லின் மற்றும் வெனிஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்கள் இந்தப் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஏ.பி.எஃப்-வால் அங்கீகரிக்கப்பட்ட பிற புகழ்பெற்ற விழாக்களாகும். இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. ஐநாக்ஸ் பாஞ்சிம், மக்வினெஸ் பேலஸ், ஐநாக்ஸ் போர்வோரிம், இசட் ஸ்கொயர் சாம்ராட் அசோக் ஆகிய 4 இடங்களில் 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இதில் விருதுக்காக 15 ஓடிடி தளங்களில் இருந்து 10 மொழிகளில் 32 பதிவுகள் வந்துள்ளன என்றும் தேர்வு செய்யப்படும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு நிறைவு விழாவில் வெளியிடப்படும் .

Vignesh

Next Post

மினி கொடைக்கானலா.? வாங்க இது எங்க இருக்குன்னு பாக்கலாம்.!

Sun Nov 19 , 2023
சுற்றுலா செல்வது என்பது மக்கள் அனைவருக்கும் இனிமையான ஒரு தருணம். தங்களது கவலைகளையும் கஷ்டங்களையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்கவும் மனதை அமைதி படுத்தவும் மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். இன்றைய பதிவில் குறைந்த செலவில் மனதிற்கு அமைதியை தரும் இயற்கை எழில் நிறைந்த ஒரு சுற்றுலாத் தலத்தை பற்றி பார்ப்போம். திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானல் மிகவும் பிரபலமான ஒன்று. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே திண்டுக்கல் மாவட்டத்தில் […]

You May Like