fbpx

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 200 காலியிடங்கள்!

இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட் அண்ட் டைப்பிஸ்ட் பணிகளுக்கு 200 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் நிறைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ/பி.டெக் பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 27. இந்த வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.19,900 – ரூ.63,200/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 20.04.2023 தேதிக்குள் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய ignou.ac.in என்ற இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம் .

Rupa

Next Post

கொழுப்பு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்த!... தினமும் ஒருகிளாஸ் குடித்தால் போதும்!... ஆய்வில் புதிய தகவல்!

Tue Apr 4 , 2023
கொழுப்பு மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, தினமும் ஒரு கிளாஸ் தக்காளி சாறு உப்பு இல்லாமல் குடிக்க வேண்டும் என்று ஆய்வில் ஒன்றில் தெரியவந்துள்ளது. நவீன காலத்திற்கு ஏற்ப நம் பாரம்பரிய உணவுகளுக்கு பதிலாக, மேற்கத்திய உணவு விருப்பங்களை நம் உணவு பழக்கத்தில் நுழைத்ததே, பல வாழ்க்கை முறை நோய்கள் நம்மை பாதிக்க காரணமாக இருக்கிறது. நமது சமையலறையில் பல நறுமணம் மற்றும் சுவை மிகுந்த மசாலா பொருட்கள், காய்கறிகள், […]

You May Like