fbpx

ஐ .ஐ.எப்.எல் நிறுவனத்தில் முதுகலை பட்டதாரிகளுக்கு ₹80000/- ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஐ.ஐ.எஃப்.சி.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள 26 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ/ பி.ஜி.டி .எம்/ எல்.எல்.பி/ பி.ஏ+எல்.எல்.பி/ சி.ஏ/ பி.இ/ பி.டெக் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 மற்றும் உச்சபட்ச வயது வரம்பு 30 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.80,000/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 12/4/2023 தேதிக்குள் ஐ.ஐ.எப்.சி.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு பொதுப் பிரிவினருக்கு 600 ரூபாயும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு நன்னடத்தை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய .iifcl.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

சுவாச பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?... oxygen ஏற்றம் அதிகப்படுத்த ஏலக்காய் பெஸ்ட்!... நன்மைகள் ஏராளம்!

Thu Mar 23 , 2023
சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏலக்காயை உணவோடு சேர்த்துக் கொள்ளுவதால் oxygen ஏற்றத்தில் நல்ல மாற்றம் இருப்பதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஏலக்காய் அனைத்து வகையான உணவுக்கும் பயன்படுத்தப்படுவதோடு ஆயுர்வேத மருந்தாகவும் காலகாலமாக பயன்படுத்தப்படுகிறது. பல நன்மைகள் நிறைந்துள்ள ஏலக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதையும், இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதையும் பார்ப்போம். உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வு. oxygen ஏற்றம் குறைந்தளவில் […]

You May Like