fbpx

‘கூலி’ டீசரில் இருந்து எனது இசையை நீக்குங்கள்… சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி பட டீஸரில் தன் இசை பயன்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்தில் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இந்த படம் தொடர்பான அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில், தங்க குடோனுக்குள் அதிரடியாக நுழையும் ரஜினி, அடியாட்களை துவம்சம் செய்து மிரட்டலாக பஞ்ச் வசனம் பேசுவதோடு, படத்தின் தலைப்பு ‘கூலி’ என்று முடிந்திருக்கும்.

அந்த வீடியோவில், இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற ‘சம்போ சிவ சம்போ’ பாடலின் வரிகளும், ‘தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ எனும் பாடலின் இசை பின்னணியிலும் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், டீசரில் பயன்படுத்தப்பட்டுள்ள வா வா பக்கம் வா எனும் தன் இசைக்கு முறையே அனுமதி பெற வேண்டும் இல்லை என்றால் அந்த இசை பகுதியை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் இளையராஜா. தன் இசையை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் விடுத்துள்ளார். சினிமா வட்டாரங்களில் தற்போது இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தான் இசையமைத்த பாடல்கள் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என்றும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது என்றும் மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு உரிய காப்புரிமையை செலுத்திவிட்டு பயன்படுத்தலாம் எனவும் இளையராஜா கூறியது குறிப்பிடத் தக்கது.

Next Post

கோவிஷீல்டு காரணமாக 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே இரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் : முன்னாள் ஐசிஎம்ஆர் விஞ்ஞானி

Wed May 1 , 2024
கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டைப் பெறும் 10 லட்சத்தில் ஏழு முதல் எட்டு நபர்கள் மட்டுமே த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (டிடிஎஸ்) எனப்படும் அரிய பக்க விளைவை அனுபவிக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் தலைசிறந்த தொற்றுநோயியல் நிபுணரும், முன்னாள் ஐசிஎம்ஆர் விஞ்ஞானியுமான டாக்டர் ராமன் கங்ககேத்கர், இந்த தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றார். UK ஊடக அறிக்கைகளால் மேற்கோள் காட்டப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, நாட்டை தலைமையிடமாகக் கொண்ட […]

You May Like