fbpx

’குட் பேட் அக்லி’ படத்திற்கு இளையராஜா வைத்த செக்..!! அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியதால் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்..!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் உலகளவில் 4 நாட்களில் ரூ.155 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் தான், அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்றுள்ள ஒருத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக 7 நாட்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.5 கோடி இழப்பீடு கேட்க வேண்டுமென்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்..!! 8ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன்..!! தடுக்க சென்ற ஆசிரியருக்கும் நேர்ந்த சோகம்..!!

English Summary

Music composer Ilayaraja has sent a notice to Mythri Movie Maker, the production company of Ajith’s Good Bad Ugly.

Chella

Next Post

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை..!! ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!! அதிமுகவில் பரபரப்பு..!!

Tue Apr 15 , 2025
Governor R.N. Ravi has approved legal action against former AIADMK minister Rajendra Balaji.

You May Like