கூகுள் இணை நிறுவனரான செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷானஹானுடன் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் செர்ஜி பிரின் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்டிருந்தது.. எலான் மஸ்க் மற்றும் செர்ஜி பிரின் நெருங்கிய நண்பர்கள் என்றும், எனினும் செர்ஜியின் மனைவியுடன் எலான் மஸ்க் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த பிறகு, இரண்டு தொழில்நுட்ப கோடீஸ்வரர்களுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் நிக்கோல் ஷனஹானுடன் தொடர்பு இல்லை என்று எலோன் மஸ்க் மறுத்துள்ளார். தந்து ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ எலான் மஸ்க் கூகுள் இணை நிறுவனவரின் மனைவியுடன் உறவு வைத்திருந்ததால் அவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது.. இருவரும் இப்போது நண்பர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.. இது மொத்த முட்டாள்தான்.. செர்ஜியும் நானும் நண்பர்கள், நேற்றிரவு ஒன்றாக ஒரு பார்ட்டியில் இருந்தோம்!” நான் நிக்கோலை மூன்று வருடங்களில் இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன.. எங்களை சுற்றி பலர் இருந்தனர்.. காதல் எதுவும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்..
எலான் மஸ்கின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளியான சமீபத்திய தகவல் இதுவாகும்.. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது நியூராலிங்க் நிறுவ்னாத்தின் மூத்த நிர்வாகிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு எலான் மஸ்க் தந்தையானார் என்று அறிக்கைகள் தெரிவித்தன.
ப்ளூம்பெர்க்கின் பணக்கார பட்டியலின் படி, 242 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் மிகப்பெரிய பணக்காரராக எலான் மஸ்க் இருக்கிறார். செர்ஜி பிரின் 94.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பணக்காரர் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..