தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சென்னையைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, ‘‘நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், என் அனுமதியின்றி கருவைக் கலைத்துள்ளார்’’ எனக் கூறி, அவர் மீது 2011இல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை, ஆரம்பம் முதலே சீமான் மறுத்து வருகிறார். அவ்வப்போது இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி அரசியல் களத்தில் பேசுபொருளாவதும், பிறகு அமைதியாவதும் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.
இப்படியான நிலையில் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கடந்தாண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்திருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இந்த வழக்கில் தன்னால் வெல்ல முடியாது என்பதால், அவரே அந்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டு கர்நாடகாவுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த வீடியோவில், ”நான் கர்நாடகாவில் வாழ மிகவும் சிரமப்படுகிறேன். எனது அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை. அவுங்கள பாக்குறதா..? இல்ல நான் வேலைக்கு போறதா இந்த மாதிரி நிறைய சிக்கல்களை அனுபவிச்சிட்டு வர்றேன். கடந்த வருடம் இப்படி தவித்துக் கொண்டிருக்கும் போது தான் சீமான் வந்தார். ஆனால், மதுரை செல்வத்தால் எல்லாம் நாசமாகிவிட்டது. அதனால்தான் வழக்குப் பதியும் நிலைக்கு தள்ளப்பட்டேன். சீமானுக்கு எந்த கவலையும் இல்லை.
நான் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கேன். உறுதியா இந்த வாரம் துயரமான முடிவு எடுக்கப் போகிறேன். 12 வருடமாக நான் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். காவல்துறையும் எதுவும் செய்யவில்லை. எனக்காக யாரும் இல்லை. நான் முடிவைத் தேடிக் கொள்ளப் போகிறேன். இதற்கு சீமான் தான் காரணம்” என்று விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.