வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தின் இறுதியில் 2ஆம் பாகத்தில் வரும் சில காட்சிகள் இணைக்கப்பட்டு எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் அதன் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.
இப்படம் வரும் 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் விஜய் சேதுபதி தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது நெறியாளர், தெலுங்கில் கங்குவா படமும், தி கோட் படமும் தோல்வியடைந்ததாக கூறுகிறார்.
அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் புரொமோஷனுக்காக வந்திருக்கிறேன். மற்ற படங்கள் குறித்து நான் எதற்கு பேச வேண்டும். அதற்கு நான் முன்பே பதிலும் சொல்லிவிட்டேன். அது எனக்கும் நடந்திருக்கிறது. மக்கள் என்னையும் ட்ரோல் செய்தனர். அதெல்லாம் பொதுவாக நடப்பதுதான். அனைவருமே வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான் படம் எடுக்கிறோம். தோல்வியடைவதற்காக அல்ல. படம் வெளியாவதற்கு முன்பு மக்களிடம் காண்பித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிவோம். என்னுடைய தோல்வி படங்களைக் கூட மக்களுக்கு போட்டுக் காட்டி கருத்துகளை கேட்டுள்ளோம். அதை எல்லோரும் செய்ய வேண்டும்” என்றார்.
Read More : SBI வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.64,480 வரை..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!