கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பகட்ட வரவேற்பு சாதகமாக அமைந்துள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கம் முதல் இறுதி வரை பொழுதுபோக்கு குறையாமல் நகர்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கவினின் இயல்பான நடிப்பும், நயன்தாராவின் கதாபாத்திரமும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தை பார்த்த ரசிகர்கள், கதைக்களம் முற்றிலும் புதிதானதாக […]
movie
தமிழ் திரையுலகில் திரையரங்கு வெளியீடு மற்றும் ஓடிடி ரிலீஸ் இடையிலான இடைவெளி தொடர்பான பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. தயாரிப்பாளர்களின் வருவாய், திரையரங்குகளின் நலன், ஓடிடி நிறுவனங்களின் ஒப்பந்தம் என பல்வேறு தரப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, புதிய படங்களின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் […]
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் பெற்றவர் மன்சூர் அலிகான். 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தனது பட வாய்ப்புகள் மற்றும் திரைத்துறையில் தனக்கு ஏற்பட்டதாகக் கருதும் புறக்கணிப்புகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ‘ஆல் பாஸ்’ திரைப்பட நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துகள் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான், […]
பல ஆண்டுகளாக ஆக்ஷன், எமோஷன், கமர்ஷியல் என பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தனது திரைப்பயணத்தில் சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வழக்கமான சூர்யா படங்களில் இருந்து மாறுபட்ட குடும்பம், காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி […]
ஓ.டி.டி-யில் தினமும் புதுப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எந்த படத்தை பார்க்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். திகில், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த படங்களை விரும்புபவர்களாக இருந்தால், இந்த வாரம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்றாக ‘டெத் விஸ்பரர் 3’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘டெத் விஸ்பரர் 3’ (Death Whisperer 3) திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. […]
ஒரு காலத்தில் காதலை மென்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லிய தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தன. ஆனால் சமீப காலங்களில் வெளியாகும் பல படங்களில் காதலின் உணர்வை விட கவர்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் மீண்டும் அழகான காதல் கதைகள் வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை நடிகை ஜோதிகா வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தமிழ் […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் […]

