இந்திய பிரதமர் மோடியை, என்றென்றும் அழியாதவர் என்று சீன நெட்டிசன்கள் அழைக்கின்றனர்..
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தி டிப்ளமாட் (The Diplomat) என்ற இதழில் ‘சீனாவில் இந்தியா எப்படிப் பார்க்கப்படுகிறது?'( How is India viewed in China?) என்ற கட்டுரை வெளியாகி உள்ளது.. சீன சமூக ஊடக தளமான Sina Weibo தளத்தை (சீனாவில் ட்விட்டரைப் போன்றது) பகுப்பாய்வு செய்வதில் பெயர் பெற்ற பத்திரிகையாளர் மு சுன்ஷன் இந்த கட்டுரையை எழுதி உள்ளார்.. அதில் “ மோடி தலைமையிலான இந்தியாவால் உலகின் முக்கிய நாடுகளிடையே சமநிலையை பேண முடியும் என்று பெரும்பாலான சீனர்கள் நம்புகின்றனர்..
Sina Weibo தளத்தில் 582 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஆக்டிவாக உள்ளனர்.. “பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன இணையத்தில் ஒரு அசாதாரண புனைப்பெயர் உள்ளது: மோடி லாக்சியன். லாக்ஸியன் என்பது சில வித்தியாசமான திறன்களைக் கொண்ட, என்றென்றும் அழியாத ஒரு முதியவரைக் குறிக்கிறது.
மற்ற தலைவர்களை விட சீன இணையவாசிகள் மோடி வித்தியாசமானவர், இன்னும் ஆச்சரியமானவர் என்று நினைக்கிறார்கள்.. சீனர்கள் மோடியின் உடை மற்றும் உடல் தோற்றம் இரண்டையும் சுட்டிக்காட்டுகிறார்கள், அது ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளாக இருந்தாலும் சரி, உலகளாவிய தென் நாடுகளாக இருந்தாலும், இந்தியா அந்த நாடுகளுடன் நட்புறவை அனுபவிக்க முடியும்.. இதனால் சில சீனர்கள் மோடியை பாராட்டுகின்றனர்..
நான் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக சர்வதேச ஊடக அறிக்கைகளை செய்து வருகிறேன், சீன நெட்டிசன்கள் வெளிநாட்டு தலைவருக்கு புனைப்பெயர் வைப்பது அரிது. மோடியின் புனைப்பெயர் மற்ற அனைத்தையும் விட தனித்து நிற்கிறது. எனவே மோடி, சீன மக்கள் கருத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் ஆகியோருக்கு விருந்தளிப்பது மட்டுமல்லாமல், 2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மோடி 69 வயதான ஜியுடன் வுஹானிலும் பின்னர் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்திலும் இரண்டு முறைசாரா உச்சி மாநாடுகளை நடத்தினார்.
இந்தியா மேற்கு நாடுகளுக்கு பிடித்தமானது, அதே நேரத்தில் சீனா மேற்கு நாடுகளின் இலக்காக மாறியுள்ளது. இதை இந்தியா எவ்வாறு சமாளித்தது? இந்தியாவின் சர்வதேச நட்பு வட்டம் ஏன் இவ்வளவு பெரியது?” என்ற கேள்வி சீன நெட்டிசன்களால் விவாதிக்கப்பட்டது. நிச்சயமாக, பெரும்பாலான சீன மக்கள் இந்தியா அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருப்பதைப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் சீனாவும் இந்தியாவும் இன்னும் ஒத்துழைக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்..” என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது..