தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாளாகும். 2023-24 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இம்மாதம் 8ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.
முதலில் மே 19ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மே 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனை அடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் நினைப்புக்கு இன்று தான் கடைசி நாளாகும்.