வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் தமிழக டிஜிபியாக பணிபுரிந்து வரும் சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது. அதில் டிஜிபி பதவியில் அமருவதற்கு தகுதியான நபர்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், உள்துறை அமைச்சகம் 3 பேரின் பெயரை அனுப்ப மாநில அரசு அந்த மூவரில் ஒருவரை தேர்வு செய்வார்கள்.
இந்நிலையில், இந்த பணியும் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்புவின் பனிக்காலமும் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஓய்வுக்கு பின் பணிபுரியும் விதமாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொடுத்த ஆஃபரை இறையண்பு மறுத்துள்ளார். இதனால் தலைமை தகவல் ஆணையர் பதவி சமீபத்தில் நிரப்பப்பட்டது.
மேலும், சைலேந்திரபாபுவின் திறமையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியை அவருக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களை இளைஞர்களை தனது பேச்சால் ஊக்கப்படுத்தும் சைலேந்திரபாபு நிர்வாக திறமைமிக்கவர். அதனால் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என முதல்வர் தரப்பு கருத்துகிறதாம். அதனால் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பு கடந்து ஓராண்டாக நிரப்பப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஓய்வு பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதி முதல் சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு குரூப் 4 கவுன்சிலிங் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.