fbpx

ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு.. ஜனவரி 31 ஆம் தேதி இத செய்ய மறந்துடாதீங்க..!!

நாடு முழுவதும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் மத்திய மாநில அரசுகளால் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு கூட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க உள்ளார். சென்னை கூடுதல் ஓய்வூதிய இயக்குனர் முன்னிலை வகிக்க உள்ளார். 

எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது அரசு கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்களை பெறுவதில் சிக்கல் இருந்தால் இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை ஜனவரி 31-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு இரட்டை பிரதிகளில் அனுப்பலாம்.

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு இந்த மனுக்களை அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியில் இருந்து ஓய்வு பெற்ற கடைசி நாள், ஓய்வூதியம் கொடுவை எண், ஓய்வூதியம் பெற்று வரும் கருவூலம் ஆகிய விவரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு பதில் ஏதேனும் பெற்றிருந்தால் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும். இதை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களின் குறைகள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து ஓய்வூதியதார்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

Read more : மகளின் உயிர் பிரிவதை, ஒன்றாக நின்று வேடிக்கை பார்த்த குடும்பம்.. நெஞ்சை பதற வைக்கும் ஓர் கொடூர சம்பவம்!!!

English Summary

Important notice for pensioners.. Don’t forget to do this on 31st January..

Next Post

குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Tue Jan 28 , 2025
imman annachi met with an accident with his family members

You May Like