fbpx

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. EPFO-ன் இந்த சேவைகள் ஆன்லைனிலேயே கிடைக்கும்..

ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இபிஎஃப்ஓ அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.. ஒவ்வொரு மாதம் சம்பளத்தில் பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்படும் போது, ஊழியர் சார்பில் குறிப்பிட்ட தொகையும், அவர் புணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் குறிப்பிட்ட தொகையும் சேர்க்கப்படும்.. இந்த தொகையே பிஎஃப் பங்களிப்பு என்று அழைக்கப்படுகிறது..

இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் 4 முக்கிய சேவைகளை இபிஎஃப்ஓ அமைப்பு ஆன்லைனில் வழங்குகிறது.. அதன்படி, ஜீவன் பிரமான் விசாரணை PPO எண், PPO விசாரணை/பணம் செலுத்துதல் விசாரணை, உங்கள் ஓய்வூதிய நிலையை அறிந்து கொள்வது ஆகிய சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன..

மேற்கூறிய சேவைகளை அணுகுவதற்கான படிப்படியான வழிமுறைகள் பின்வருமாறு:

ஜீவன் பிரமான் விசாரணை :

  • https://www.epfindia.gov.in/ இல் உள்நுழைக
  • ஆன்லைன் சேவைகளின் கீழ் Pensioners போர்ட்டலைத் தேர்ந்தெடுக்கவும்
  • Jeevan Pramaan Enquiry தேர்ந்தெடுக்கவும்
  • உங்கள் ஜீவன் பிரமான் ஐடியை உள்ளிடவும்
  • Submit என்பதை அழுத்தவும், நீங்கள் தேடும் பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்

உங்கள் PPO எண்ணை அறிந்து கொள்ளுங்கள்

  • https://www.epfindia.gov.in/ இல் உள்நுழைக
  • ஆன்லைன் சேவைகளின் கீழ் Pensioners என்பதை தேர்ந்தெடுக்கவும்
  • Know Your PPO Number என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • உங்களிடம் இரண்டு விருப்பங்கள் உள்ளன — வங்கி கணக்கு எண். தேடல் மற்றும் உறுப்பினர் ஐடி தேடல்
  • பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • உங்கள் EPFO-இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண் அல்லது உறுப்பினர் ஐடியை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்

PPO விசாரணை/கட்டண விசாரணை

  • https://www.epfindia.gov.in/ இல் உள்நுழைக
  • ஆன்லைன் சேவைகளின் கீழ் Pensioners போர்ட்டலைத் தேர்ந்தெடுக்கவும்
  • PPO Enquiry/Payment Enquiry விசாரணையைத் தேர்ந்தெடுக்கவும்
  • வழங்கப்பட்ட அலுவலகம், அலுவலக ஐடி, பிபிஓ எண், ஓய்வூதியதாரரின் பிறந்த தேதி மற்றும் சரிபார்ப்புக்கான கேப்ட்சா உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்

உங்கள் ஓய்வூதிய நிலையை எப்படி அறிந்து கொள்வது..?

  • https://www.epfindia.gov.in/ இல் உள்நுழைக
  • ஆன்லைன் சேவைகளின் கீழ் Pensioners போர்ட்டலைத் தேர்ந்தெடுக்கவும்
  • Know Your Pension Status என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • வழங்கப்பட்ட அலுவலகம், அலுவலக ஐடி மற்றும் பிபிஓ எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
  • இவை தவிர, EPFO ​​உறுப்பினர்கள் தற்போதுள்ள EPF/EPS நியமனத்தை மாற்ற ஆன்லைனில் புதிய நியமனத்தை தாக்கல் செய்வது போன்ற சேவைகளையும் அனுபவிக்க முடியும்.

Maha

Next Post

”8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை”..! அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி..!

Wed Aug 31 , 2022
8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தப் பின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக முதல்வர் முக.ஸ்டாலின் பேசும்போது, 8 வழிச்சாலை அமைக்கும் […]
”8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை”..! அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி..!

You May Like