fbpx

SSC‌ தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! வெளியான தேர்வு தேதி…

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு 2024-ஐ கணினி வழியில் நடத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

தென் பிராந்தியத்தில் மொத்தம் 4,94,331 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 மையங்களில் 31 இடங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், தேர்வு நடைபெற உள்ளன. ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, ஓங்கோல், வைசியநகரம்; தெலங்கானாவில் ஹைதராபாத், வாரங்கல், கரீம்நகர் ஆகிய இடங்களிலும் தேர்வு நடைபெற உள்ளன.

தென் மண்டலத்தில் 09.09.2024 முதல் 13.09.2024 வரையிலும், 17.09.2024 முதல் 19.09.2024 வரையிலும், 23.09.2024 முதல் 26.09.2024 வரையிலும் 12 நாட்கள் தேர்வு நடைபெறும். காலை 09:00 மணி முதல் 10:00 மணி வரை 1-வது ஷிப்ட், மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை 2வது ஷிப்ட் மற்றும் 3-வது ஷிப்ட் மாலை 04:00 மணி முதல் 05:00 மணி வரை என 3ஷிப்ட்களாக தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும், 4 நாட்களுக்கு முன்பாக தேர்வுக் கூட அனுமதி சீட்டை ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் அசல் அடையாள ஆவணமின்றி வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

English Summary

Important Notice for SSC Candidates

Vignesh

Next Post

'GOAT' படம் பார்க்க போறீங்களா..? அப்படினா நீங்க தான் ஆடு..!! உயிரை வாங்கிட்டாங்க..!! விஜய்யை வெச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

Fri Sep 6 , 2024
Famous cinema critic Blue shirt Maran has criticized the film 'Goat'.

You May Like