fbpx

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை..

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது..

தமிழ் சினிமா துறையில் பிரபல பைனாஸ்சியராக உள்ள அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.. ஆண்டவன் கட்டளை, மருத, வெள்ளைக்கார துரை போற படங்களை அவர் தயாரித்துள்ளார்.. சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாகவும் அவர் இருந்துள்ளார்.. இந்நிலையில் சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மதுரையில் உள்ள அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ்.தானு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.. வருமானத்தை சரியாக காட்டாதது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த வருமான வரி சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது..

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு, வி. கிரியேஷன் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.. அவரின் தயாரிப்பில் வெளியான பல படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.. துப்பாக்கி, தெறி, கபாலி, வேலையில்லா பட்டதாரி 2, அசுரன் கர்ணண் உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

Maha

Next Post

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?

Tue Aug 2 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]

You May Like