fbpx

நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்ட முக்கிய அப்டேட்: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில்..!

நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் “ஹெல்த் வாக் சாலை திட்டம்” தொடங்கப்படவுள்ளதாகவும், நவம்பர் 4ஆம் தேதி சென்னையில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் “ஹெல்த் வாக் சாலை திட்டம்” தொடங்கவுள்ளதாகவும், இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்தாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியம், நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு “ஹெல்த் வாக் சாலை” அமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து விசாரித்தபோது தான், மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், 8 கி.மீ தூரத்திற்கு தான் இந்த ஹெல்த் வாக் சாலை அமைத்துள்ளதாக தெரியவந்தது.

சென்னை வந்ததும் இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்ததுமே உடனடியாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 38 மாவட்டங்களிலும் இந்த ஹெல்த் வாக் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 38 மாவட்டங்களிலும் சாலைகள் தேர்தெடுக்கப்பட்டு இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டு, விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பார்க்-ல் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங்கன்னி சர்ச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க் வரை சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4-ம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் தொடங்கி வைக்கின்றார்” என அமைச்சர் தெரிவித்தார். ஹெல்த் வாக் சாலை திட்டம் சரியான சாலை இல்லாமல் வாகனங்களுக்கு பயந்து நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Kathir

Next Post

இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காடு!… நினைத்துப்பார்த்தாலே மர்மம்தான்!… அதிர்ச்சியூட்டும் அறிவியல் பின்னணி!

Sun Oct 22 , 2023
மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவின் மிகப் பெரிய மலைத் தொடர் ஆகும்.   தழிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் வரை  நீண்டு 1600 கி.மீ. தொலைவுக்கு பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. 35 சிகரங்களைக் கொண்ட இம்மலைத் தொடரில் இந்தியாவிலேயே அதிக அளவில் யானைகள் உள்ளன. இதுதவிர, புலி, சிறுத்தை, ஆடு இனங்கள் […]

You May Like