fbpx

இன்னும் சில மணி நேரங்களில்..!! 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!!

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடனும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

முன்னெச்சரிக்கை நடவடிக்கை...! தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் தேசியப் பேரிடர் மீட்புப் படை...!

Mon Nov 20 , 2023
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை முன்னிட்டுக் கேரள மாநில அரசும் கோயில் தேவம்சம் வாரியமும் கேட்டுக் கொண்டதையடுத்து தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சபரிமலைக்கு செல்கின்றன. தேசியப் பேரிடர் மீட்புப் படைப் பிரிவின் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செயல்படும் 4 வது படை பிரிவில் இருந்து துணை ஆய்வாளர் உமா மகேஸ்வர் தலைமையில் […]

You May Like