fbpx

இன்னும் சில மணி நேரங்களில்..!! வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,
தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளியான அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், வரும் 16ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று அதி கனமழை எனப்படும் 25 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

டிப்ளமோ படித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tue Nov 14 , 2023
மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Bharat Heavy Electricals Limited) வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மூலம் மேற்பார்வையாளர் பயிற்சியாளர் பதவிக்கு, 3 வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 65 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்வி தகுதி: Supervisor Trainee (சிவில்) : சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ.Supervisor Trainee (மெக்கானிக்கல்) […]

You May Like