fbpx

இன்னும் சில மணி நேரங்களில்..!! 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (நவ. 9, 10) பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தருமபுரி, நாமக்கல், சேலம், கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அடக்கடவுளே..!! காய்கறி பெட்டிக்கு பதில் மனிதனை நசுக்கி கொன்ற ரோபோ..!! இதுவரை 41 பேர் பலி..!!

Thu Nov 9 , 2023
இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை சில நிமிடங்களில் செய்து முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. நவீன தொழில்நுட்பம் வந்த நிலையில், பல நிறுவனங்களில் மனித உழைப்பின் தேவையை குறைந்துள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பத்தால் வரும் ஆபத்துகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அப்படி ஒரு சம்பவம் தென் கொரியாவில் நடந்துள்ளது. தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாய விளைபொருள் விநியோக மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து […]

You May Like